அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரிலுள்ள விமானம் நிலையத்தில் தரை இறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட “செஸ்னா 152” மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட “செஸ்னா 340” போன்ற 2 சிறியரக விமானங்கள் வந்து கொண்டிருந்தது. எதிர் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது எதிர்பாராத வகையில் நடுவானில் நேருக்கு நேர் மோதியது.
இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்தபடி விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் செஸ்னா 152 விமானத்தில் 1 விமானியும், செஸ்னா 340 விமானத்தில் விமானி உள்பட 3 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.