Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோத இருந்த…. இரு விமானங்கள்…பெரும் விபத்து தவிர்ப்பு…!!!!

லண்டன் நாட்டில் இருந்து இலங்கை, கொழும்பை நோக்கி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற  நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் ஒன்று, 275 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம், துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேராக, மோதக் கூடிய ஆபத்து இருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் சாமர்த்தியத்தினால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

இவ்வாறு விமானிகள், சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை பாராட்டியும் மற்றும் அனைத்து பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.  இவ்வாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் 33,000 அடி உயரத்தில் இலங்கை விமானம் பறந்துகொண்டிருந்த நிலையில், பறக்கும் உயரத்தை மேலும் 35,000 அடிக்கு அதிகரிக்கவேண்டும் என அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கூறப்பட்டுள்ளது.

அப்போது, இலங்கை விமானத்தின் விமானிகள், 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை கண்டறிந்துள்ளனர். மேலும் இதுபற்றி அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இவ்வாறு அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2-முறை தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் இலங்கை விமானிகள், விமானத்தை மேலே உயர்த்த மறுத்துவிட்டனர். அதன் பின், சில நிமிடங்கள் கழித்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர தகவல் அனுப்பப்பட்டு, ஏற்கெனவே 35,000 அடிக்கு மேலே துபாய் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமானத்தின் உயரத்தை ஏற்ற வேண்டாம் எனவும்  தெரிவித்துள்ளது. எனவே கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூறிய தகவலின்படி, இலங்கை விமானத்தின் கேப்டன் விமானத்தை குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்தியிருந்தால், வேகமாக வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்ற விமானத்துடன் நடுவானில் மோதி விபத்தை எதிர்கொண்டிருக்கும். இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Categories

Tech |