நேரு சிலையின் பீடத்தின் மீது கார் மோதியதால் சேதம் அடைந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு எதிரே நேரு சிலை இருக்கின்றது. இந்த சிலை 1989-ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த நிலையில் நேற்று இரவு கார் ஒன்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது மோதியதால் பீடத்தின் சுவர் சேதமடைந்தது.
இதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சிலை முன்பாக மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காரை பறிமுதல் செய்தனர். இதன்பின்னரே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.