பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஓப்ராவுடனான நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் மேகன் தொகுப்பாளர் ஓப்ராவுக்கு அனுப்பிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஓபரா உடனான நேர்காணலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்திற்கு எதிராக பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர். அந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேகனின் தந்தை உட்பட பிரித்தானியர்கள் பலரும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.
இதற்கிடையில் பிரிட்டன் மகாராணியும் குற்றசாட்டுகள் குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஓபரா உடனான பேட்டியில் மேகன் ஓப்ராவிற்கு அனுப்பிய செய்தி வெளியாகியுள்ளது. நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதிலிருந்து ஹரி மற்றும் மேகன் ‘என்னிடம் உண்மையில் பேசவில்லை ‘என்றும் ‘ஏனென்றால் வெவ்வேறு நேர மண்டலங்களில் நாங்கள் இருக்கிறோம்’ என்றும் ஓப்ரா கூறியுள்ளார்.
ஆனால் மேகன் நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் ஓப்ராவிற்கு ‘நிகழ்ச்சி எப்படி போகிறது’ என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அதற்கு ஓப்ரா ‘நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது என்னால் சொல்ல முடியும்’ என்று கூறியுள்ளார் .