இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக விஜயின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சரளைமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கு படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ராஜ்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.