கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பூச்சம்பட்டியில் லிங்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரங்கசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சரவணன் என்பவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.