Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேர்த்தி கடனை செலுத்தி வரும் பக்தர்கள்…. அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வேலக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால் தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக   கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |