பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேற்று இரவு வரை காத்திருந்த நிலையில் தற்போது சந்தித்து ஆலோசித்துள்ளனர். இதில் தமிழக அரசியல் சூழல் குறித்தும், சசிகலா குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அதிமுகவில் சில முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.