Categories
மாநில செய்திகள்

நேற்று ஒரே நாளில் மட்டும் 2.10 லட்சம் ரயில் பயணிகள்…. வெளியான தகவல்…..!!!!!!

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் நேற்று பேருந்துகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதாவது மிக குறைந்தளவில் பேருந்துகள் ஓடியதால் பொதுமக்கள் அலுவலகங்கள், தொழிற் நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கோயம்பேடு- பாரிமுனை இடையில் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மக்கள் மெட்ரோ ரயிலை அதிகளவு பயன்படுத்தினர். அதேபோன்று வடசென்னை மக்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது.

மேலும் விம்கோ நகர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் சென்ட்ரல் வழியே பல பகுதிகளுக்கு செல்ல முடிந்தது. 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நின்று பயணம் மேற்கொண்டனர். வடபழனி, அசோக்நகர், திருமங்கலம், ஆலந்தூர் உட்பட பல ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதையடுத்து இரவு 11 மணி வரை நடந்த மெட்ரோ ரெயில் சேவையிலும் மக்கள் அதிகளவு பயணித்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 362 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையில் கூட இவ்வளவு பேர் பயணம் செய்தது இல்லை. அதன்பின் கொரோனா பாதிப்புக்கு பின் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பயணிகள் நேற்று பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |