Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,63,172 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,242,932 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 4 ஆயிரத்து 366 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.55 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 85 ஆயிரத்து  459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,670 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 1 லட்சத்து 63 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக  நேற்று மட்டும் பிரேசில் 29,313 பேரும் ,அமெரிக்காவில்  40,540 பேரும்,இந்தியாவில் 19,620 பேரும் , ரஷ்யாவில் 6,791 அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். நேற்று  மட்டும் 1.63 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95,410 பேர் குணமடைந்தது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

Categories

Tech |