நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 188க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 10,081,545 பேர் பாதிக்கப்பட்டு, 5,01,298 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 5,458,369 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 4,121,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57,748 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 1,79,316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . நேற்று மட்டும் 1,00,000க்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் அதிகபட்சமாக அமெரிக்காவில் 43,581 பேரும், பிரேசில் நாட்டில் 35,889 பேரும், இந்தியாவில் 20,131 பேரும்,ரஸ்சிய நாட்டில் 6,852 பேரும், பிரிட்டனில் 890 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.