இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் 6,73,904 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 279 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 9 ஆயிரத்து 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4 லட்சத்து 28 ஆயிரத்து 341 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.
நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 24 ஆயிரத்து 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக நேற்று மட்டும் மஹாராஷ்டிராவில் 7,074 பேரும் , தமிழ்நாட்டில் 4,280 பேரும் , டெல்லியில் 2,505 பேரும் , குஜராத்தில் 712 அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.நேற்று மட்டும் 24,015 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,743 பேர் குணமடைந்தது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.