தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 அரசு மற்றும் 46 தனியார் கொரோனா பரிசோதனை மையம் என 98 உள்ளது. இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா மாதிரி சோதனை செய்யப்பட்டதால் மொத்த பரிசோதனை 13,87,322ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மட்டும் இதுவரை 72,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 74,167 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 64 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46,480பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் வீதம் 60.61 %ஆக உள்ளது. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 63 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது,
நேற்று ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக தொற்று உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.