Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேற்று தொடங்கியது… தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்… உற்சாகத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்….!!!!!!!!!

தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த முப்பது வருடங்களில் மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, லெபனான், சிரியா, இலங்கை உட்பட 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கஸ் ஈரோடு மரப்பாலம் பேபி ஆஸ்பத்திரி அருகே உள்ள மஹாஜன பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் குறிஞ்சி என் தண்டபாணி, சசிகுமார் போன்றோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து உள்ளனர்.

இதில் கவுன்சிலர்கள் ரமணி சபுரா, ஜாபர் சாதிக் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வல்லுனர்களால் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் செய்து காண்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் ஆக்ரோபட் 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடமாடும் ரஷியன் ரிங்டன்ஸ் பழங்களை கால்களால் விளையாடும் ரஷியன் புட் ஜங்கினின், பெண்கள் கயிற்றைக் கொண்டு சாகசம் புரியும் ரஷியன் போன்ற சாகச நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஜம்னாஸ்டிக் பின்புறம் உள்ள பொருளை திரும்பிப் பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி சூட்டிங் நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் உயிரை பணையம் வைத்து அந்த இடத்தில் அழகிய தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக் பிடிமானம் எதுவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸ் இன்டர்வியூஸ் குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அலையும் சாகச நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. பிரேக் இல்லாத சைக்கிள் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓடுதல், அமர்ந்து பின்னோக்கி சைக்கிளை ஓட்டி அழகிகள் அசத்தியுள்ளனர்.

மேலும் கால்களால் முன்னும் பின்னுமாக வேகமாக நடந்து நாய்கள் ஓட்டத்தின் அணிவகுப்பு போன்றவற்றை சிறுவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்துள்ளனர். தினமும் மதியம் ஒரு மணி, மாலை 4 மணி இரவு 7 மணி என மூன்று காட்சிகளாக சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளை கண்டு கழிப்பதற்கு டிக்கெட் கட்டணமாக ரூபாய் 600, ரூபாய் 150, ரூபாய் 100 நிர்ணயிக்கப்படுகின்றது.

Categories

Tech |