Categories
தேசிய செய்திகள்

நேற்று தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்… உடனே போங்க…!!!

மருத்துவ கலந்தாய்வில் நேற்று கலந்துகொண்ட நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வின் தொடக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அந்த கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |