இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலையை மீண்டும் குறைத்து இருக்கிறது. அவ்வபோது விலைவாசி உயர்வினால் மக்கள் போராட்டம் நடத்தி வந்த சூழலில் இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டு வார காலத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்றிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 370 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. 92 ரக பெட்ரோல் விலை ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.370க்கு விற்பனையாகிறது. ஆட்டோ டீசல் விலை ₹ 15 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.415க்கு விற்பனை ஆகிறது மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் இந்த சூழலில் டீசல் பற்றாக்குறையால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆனால் தற்போது பொது போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.