Categories
தேசிய செய்திகள்

நேற்று நள்ளிரவு முதல் திடீர் போராட்டம்…. பயணிகள் கடும் அவதி…!!!

மகாராஷ்டிராவில் எம்எஸ்ஆர்டிசி எனப்படும் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்றும், நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

ஆனால் போக்குவரத்து கழகத்தினை மாநில அரசுடன் இணைப்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதன் காரணமாக புனேவிற்கு வரும் மற்றும் புனேவில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |