நேற்று மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்த தலைநகர் சென்னை தற்போது கட்டுக்குள் இருக்கின்றது. அங்கு பல்வேறு விதமான முன்னெடுப்புகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னையில் குறைந்தாலும் பிற மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி விட்டது. நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு 2124 ஆக அதிகரித்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 1096 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.