சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் யசோதா மணி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பித்தது. இந்த திருவிழா வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா காலை 9.30 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை தினந்தோறும் நடைபெற உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி திருவிழா திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர்கள் ஹேமலதா, செந்தில்குமார் தலைமை தாங்கினர். கோவில் அறங்காவலர்கள் நாகப்பன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நடைபெற்ற திருவிழாவில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து அதன்பின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முன்பாக அவர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிள்ளையார்பட்டி வைரவன், சுகாதார ஆய்வாளர் சகாயராஜ், செவிலியர் செல்வி அபியா என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.