Categories
சினிமா தமிழ் சினிமா

நேற்று ரஜினி இன்று கமல்… ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ படத்தின் செகண்ட் லுக்..‌.!!

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகும் ‘ஸ்டார்’ படத்தில் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்  . இதன்பின் இவர் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் நடிப்பில் கசடதபற, ஓமணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் தயாராகியுள்ளது . இந்நிலையில் மீண்டும் பியார் பிரேமா காதல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘ஸ்டார்’ .

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினி பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்டது . அதில் ஹரிஷ் கல்யாண் தளபதி பட ரஜினி கெட்டப்பில் போஸ் கொடுத்திருந்தார் . இந்நிலையில் இன்று வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் சிகப்பு ரோஜாக்கள் பட கமல் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த செகண்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |