திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரு ஊரக திருப்பூர் அமைந்துள்ளது.
திருப்பூரில் தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50% ஏற்றுமதி ஆகிறது. மேலும் தொழிலாளிகள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் மையமாகக் கொண்டு அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். எனவே அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.