Categories
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு…. சோனியா, ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்….!!!

காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக ஜவர்ஹலால் நேருவால் அசோசியேட்டடு ஜெனரல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை திடீரென நிறுத்தப்பட்டது.  இதன் காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு அசோசியேட்டடு நிறுவனத்தின் பங்குகள் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் தலைவரிடம் உள்ளது. இதனையடுத்து ஏஜேல் நிறுவனத்தின் 2,000 கோடி ரூபாய் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்துள்ளது என பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் அன்னிய செலவாணி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு வருகிற ஜூன் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

எனவே இந்த வழக்குக்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 2 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் இந்த வழக்கில் பண மோசடி மற்றும் பண பரிவர்த்தனை செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பவன்குமார் பன்சால் உள்ளிட்டோர் விசாரிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |