நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அமலாக்கத்துறை அளித்துள்ளது.