உத்தரப்பிரதேசத்தில் கடையின் வெளியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பல்பை காவலர் திருடும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் பிரக்யராஜ் மாவட்டத்திலுள்ள புல்பூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ் வர்மா, அந்த பகுதியில் உள்ள கடையின் வெளியே எறிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. சென்ற 6ம் தேதியன்று தசரா கொண்டாட்டத்தின்போது, ராஜேஷ் இரவு பணியில் இருந்துள்ளார். அன்று தான் இச்சம்பவம் அரேங்கேறியதாக கூறப்படுகிறது.
Uttar Pradesh: Policeman steals LED bulb, caught on CCTV camera #UttarPradesh #LED #WATCH #UPPolice #ViralVideo #वायरल #Prayagraj #cctv pic.twitter.com/WEtp86Lbt2
— Harish Deshmukh (@DeshmukhHarish9) October 15, 2022
அதற்கு அடுத்தநாள் காலையில், பல்ப் காணமல் போனதை கண்ட கடைக்காரர், சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது காவலர் ஒருவர்அந்த பல்பை திருடிச்செல்லும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் அளித்த புகாரின்படி, ராஜேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் கூறியதாவது, அன்று தான் பணிபுரிந்த இடத்தில் இருட்டாக இருந்ததால், அங்கு பயன்படுத்துவதற்காகவே அதனை கழட்டியதாக கூறியுள்ளார். இதற்கிடையில் ராஜேஷ் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.