Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நைசாக பேசி அழைத்து சென்ற சிறுவன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது 15 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளான். அதன்பின் சிறுவன் அந்த சிறுமியை நைசாக பேசி அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியை மிரட்டி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது நடந்தவற்றை சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து கோவையில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |