திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தாராபுரம் பஸ் நிறுத்தத்தில் உடுமலை செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயதுள்ள மூதாட்டி ஒருவர் சித்ராவின் அருகில் நின்றுள்ளார். இதனை அடுத்து அந்த மூதாட்டி சித்ராவிடம் நைசாக பேசி அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கி சென்றுள்ளார்.
அப்போது சித்ரா கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் மூதாட்டியை விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.