நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலமான நைஜரில் டுக்கு என்ற இடத்தில் ரசித்துக் கொண்டிருக்கும் மக்களை கடத்துவதற்கு துப்பாக்கி ஏந்திய கும்பல் முயற்சி செய்துள்ளது. அதனை சுதாகரித்துக் கொண்ட உள்ளூர் பாதுகாப்பு படை அவர்களின் திட்டத்தை முறியடித்து. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலை சேர்ந்த சிலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வாரத்தில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் பெண்கள் மற்றும் போலீசார் உட்பட 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
நைஜீரியாவில் கடந்த சில வருடங்களாக வன்முறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி துப்பாக்கி ஏந்திய கும்பல் ஊருக்குள் நுழைந்து மக்களை கொன்று குவிக்கும் சம்பவம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இராணுவத் தளத்தை குறி வைத்து தாக்கியதால் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.