நைஜீரியாவில் மீண்டும் துப்பாக்கிதாரிகள் பள்ளி கூடத்திற்குள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் கடந்த டிசம்பர் முதல் நான்காவது முறையாக பள்ளிக்கூடத்திற்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்று ஜம்பரா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 279 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அதற்கு பிறகு அரசின் பேச்சுவார்த்தையால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்களெல்லாம் கிராமத்தில் உள்ள மக்களை கொன்று குவித்தும் அங்கு இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவர்களை கடத்தி செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நைஜீரியாவின் வட மேற்கு மாகாணமான கதுனாவில் இகாபி என்ற நகரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள ஊழியர்கள் சிலரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.