ராகி உருண்டையை சாப்பிட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கமகளூரு என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராகி உருண்டை சாப்பிட்டபிறகு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி பகுதியை சேர்ந்த திப்பாநாயக் மற்றும் அவரது மனைவி சுதாபாய். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் அவரது பாட்டி குந்திபாய் என மொத்தம் ஆறு பேர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் ராகி உருண்டையை தயாரித்து சாப்பிட்டுள்ளனர். இரண்டாவது மகள் தவிர மீதி ஐந்து பேரும் அந்த ராகி உருண்டையை சாப்பிட விட்டு, இரவில் உறங்கும் சென்றுள்ளனர். உறங்கச் சென்ற சிறிது நேரத்திலேயே 5 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது இரண்டாவது மகள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர்கள் உதவியுடன் 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதாபாயும், குந்திபாயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து திப்புநாயக் மற்றும் மகன் மற்றும் மகள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திப்புநாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மகன் மற்றும் மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திப்புநாயக்கின் இரண்டாவது மகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராகி உருண்டையில் விஷம் கலந்து உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வுக்கான முடிவுகள் வெளியானதும் உணவில் விஷம் கலந்து உள்ளதா? என்பது குறித்து தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.