இந்த உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சுந்தர் பிச்சை, டிம் குக், எலான் மஸ்க் என்று ஒரு பெரிய நிறுவனங்களின் சிஇஓகளாக மட்டும் தான் இருப்பார்கள். போன வருடம் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் 98.7 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் சிஇஓ 50 மில்லியன் சம்பாதித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ 25 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் . நாம் அனைவரும் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது. இவர்கள் அதிக நேரமாக வேலையும் செய்ய மாட்டார்கள், ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இவர்கள் மட்டும் எப்படி அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், சிஇஓகள் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறார்கள், எவ்வளவு கடினமாக வேலை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் விஷயமே இல்லை.
அவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை முடிவு எடுப்பது, உதாரணத்திற்கு இரண்டு நிறுவனம் உள்ளது என்றால், இரண்டு நிறுவனத்தின் பங்கு நூறு, நூறு கோடி என எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு நிறுவனத்தின் பங்கு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றொரு நிறுவனத்தின் பங்கு 10% தான் அதிகரித்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் ஒரு அளவிற்கு செயல்பட்டு இருந்தாலும் ஒரு நிறுவனத்தின் பங்கானது மற்றொரு நிறுவனத்தை விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. அதாவது 20 கோடி அதிகரித்துள்ளது. அந்த 20 சதவீதமானது அந்த நிறுவனத்தின் சிஇஓ எடுத்த இன்டெலிஜென்ஸ் முடிவால் மட்டுமே இருக்கும். இப்படி இவர்கள் அனைவரும் இவ்வளவு அதிக அளவில் பணம் சம்பாதிப்பதற்கு மூன்று மந்திரங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இதில் பார்ப்போம்.
வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்:
ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கிறோம் என்றால், வாழ்க்கையைப் பற்றி பயப்படாமல் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். சரியான முயற்சிகளுடன் நல்ல திட்டங்கள் இருந்தால் அதன்மீது நம்பிக்கையும், முயற்சியும் வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ரிஸ்க் எடுத்து ஒரு படி எடுத்து வைக்கும் பொழுது தான் வாழ்க்கையின் வெற்றிப்பாதையில் உங்களால் பயணிக்க முடியும்.
முடிவுகள் எடுப்பது :
இங்கு நிறைய பேர் ரிஸ்க்கு எடுப்பதற்கு ரெடியாக இருப்பார்கள், சில ஆர்வக் கோளாறுகள் மற்றும் பொறுமை இல்லாமையின் காரணமாக முடிவெடுப்பதில் தவறு செய்வார்கள். எப்பொழுதும் நாம் ஒரு விஷயத்தை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அதையும் தாண்டி அதை எந்த இடத்தில் செயல்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியம். அதற்கான திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அது தொழில் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சேர்த்துக் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
எளிமை:
இறுதியாக நமது தொழிலை வளர்த்துக் கொண்டு போகின்ற முறை, பெரும்பாலான உலக பணக்காரர்களில் டாட்டா குழுமம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வருவது எளிமை. இதுவரை பல பணக்காரர்கள் டாப் பட்டியலில் வந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுகின்றன. அதற்கு காரணம் இந்த எளிமை இல்லாததுதான். பணம் வந்தபிறகு அதை முறையாக கையாள தெரியாமலும், நாம் தான் முதலில் உள்ளோம் என்ற மெத்தன போக்கு காரணமாக தொழிலில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆரம்ப காலத்தில் இருந்த தொழில் மீதான கவனமும், ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.
ஆடம்பரத்தின் மீது ஆசை கொல்லாமல் தொழில் மீது மட்டுமே ஆரம்பம் முதல் செயல்படுத்தி வருபவர்கள் மட்டுமே முதலிடத்தில் உள்ளார்கள். அவர்களை நாம் என்ன செய்தாலும் கீழே இறக்கி விட முடியாது. அதற்கு சிறந்த உதாரணம் டாட்டா குழுமத்தை சொல்லலாம். இதுவே நம் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கான மூன்று முக்கிய மந்திரங்களாக கருதப்படுகின்றன. இதை பயன்படுத்தினால் நீங்களும் உங்களது வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.