நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தினமும் 60 டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 30 டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து உ.பி அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.