பிரிட்டனில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் தாமஸ் மெக்கன் (49 வயது) – யுவோன் (46 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் இருவரும் நொறுக்குத் தீனிக்காக சண்டை போட்டுள்ளனர்.
இந்த சண்டையில் கோபமடைந்த மெக்கன், யுவோனின் கழுத்தை நெரித்து கொலை செய்து செய்துள்ளார். அதன் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பகுதியில் போட்டு மறைத்து வைத்துள்ளார். இந்த குற்றத்திற்காக காவல்துறையினர் கடந்த ஆண்டு மெக்கனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த விசாரணையின் போது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்கனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மெக்கனின் குழந்தைகள் “பெற்றோர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும், அவர் தங்களது தாயை கொலை செய்ததை எங்களால் தங்க முடியவில்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.