நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு சாப்பிடுவதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.
அதன்படி பிஸ்கட், பிரட் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக கார்டியாலஜி அமெரிக்கன் கல்லூரி ஆய்வு தெரிவித்துள்ளது. அவற்றின் சுவைக்காக கலக்கப்படும் சர்க்கரை, உப்பு மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்து ஆய்வு சரியான முறையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்து என எச்சரித்துள்ளது.