தேனியில் மர்ம நபர்கள் ராணுவ வீரரின் வீட்டிலிருக்கும் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி திவ்ய பிரதீபா. இந்நிலையில் ஜெகதீஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தனது ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷ் குமாரும், அவரது மனைவியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வத்தலகுண்டிலிருக்கும் தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர்.
இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, தெருவில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு ராணுவ வீரரின் வீட்டினுடைய கதவை உடைத்து பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்கள். இதனிடையே தங்களது வீட்டிற்கு திரும்பி வந்த ராணுவ வீரர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.