நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் கொள்ளையர்கள் துணை நடிகையை கற்பழித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர் நகரில் 35 வயதுடைய சினிமா துணை நடிகை ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை நடிகை வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து துணை நடிகை கதவை திறந்தவுடன் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரிடமிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் 50,000 ரூபாய் பணத்தை பறித்ததோடு அவரை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து துணை நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வளசரவாக்கத்தில் சேர்ந்த கண்ணதாசன் மற்றும் செல்வக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக துணை நடிகையை இருவரும் மிரட்டி கற்பழித்தது தெரியவந்துள்ளது. அதாவது கண்ணதாசன் அடிக்கடி துணை நடிகையின் வீட்டிற்கு சென்று மீன் வாங்கி கொடுத்துள்ளார்.
அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கண்ணதாசன் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் தனது நண்பரான செல்வகுமார் என்பவருடன் இணைந்து அவரது வீட்டிற்கு சென்று நடிகையை மிரட்டி கற்பழித்துள்ளனர். இதனை வெளியே செல்லாமல் இருப்பதற்காக நடிகையை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து விட்டு இருவரும் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.