உக்ரைன் நோட்டாவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் நோட்டாவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது டிமிட்ரி மெட்வடேவ், “தரை மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகள் ரஷியாவின் மேற்கு பகுதியில் கூடுதலாக குவிக்கப்படும். அதேபோல் பால்டிக் பகுதியில் அணு ஆயுத பயன்பாடற்ற சூழல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியமற்ற நிலை உருவாகும். ஆகவே, மீண்டும் சமநிலை கொண்டு வரப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.