பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பீகார் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பீகாரில் நடந்த மூன்று கட்ட தேர்தல்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 கோடியாகும்.
ஆனால் பீகார் சட்டசபை தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாமல் நோட்டாவுக்கு 7,06,252 வாக்குகள் விழுந்துள்ளன. பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. இந்த தகவல் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.