பதற்றமான சூழல் நிலவுவதால் ரஷ்யாவிற்கு அனைத்து சலுகைகளையும் செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் தூதர் பேட்டி அளித்துள்ளார்.
பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நெருக்கடி நிலையில் ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளுக்கு உக்ரைன் வளைந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்து வருகிறார். இதனையடுத்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் நோட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை தவிர்த்து, மற்ற சலுகைகளை செய்ய உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நோட்டோ அமைப்பில் நாங்கள் இல்லை என்பது சட்டபூர்வமாக அனைவரும் அறிந்ததே எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் பதற்றம் நிலவுவதால் ஜெர்மனியின் அதிபர் olaf scholz பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனின் கிளிவ் நகருக்கு சென்றுள்ளார்