முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களுக்கான வருமானத்தை சசிகலா நிரூபிக்க தவறி விட்டால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினர் சமீபத்தில் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளவரசி சுதாகரன், சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் . அதோடு 90 நாட்களுக்குள் இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் நிரூபிக்காவிட்டால் வருமானவரித்துறையினர் சொத்துக்கள் கையகப்படுத்தப்படுத்துவார்கள் என்றும் புதிய சட்டத்தின் அடிப்படையில் சசிகலா, இளவரசி சுதாகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் மூத்த வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி கூறியுள்ளார். மேலும் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 வருடமும் குறைந்தபட்சமாக ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.