Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை….. தொடர்ந்து நடைபெற்ற பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணியை செய்து வந்தனர். இதனால் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றி அங்கு இருந்த விளம்பர பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |