Categories
தேசிய செய்திகள்

நோயாளிகளுக்கு இனி இது கட்டாயம்…. ஜிப்மர் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள், கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |