Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மகன்…. சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் பணியிடை நீக்கம்…. வைரல் வீடியோ….!!

பணி நேரத்தில் சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தினகர் என்பவர் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர் சண்முகவடிவு உள்பட 4 உதவி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கோமதி கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறித்து அவர் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் பணியில் இல்லாமல் சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் தினகர் மற்றும் பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |