Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் உடனே வேறு இடத்திற்கு செல்லவும்…. உச்சகட்ட அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் மருத்துவமனை ஒன்று ஆக்சிஜன் உதவி பெற்று வரும் நோயாளிகளை வேறு இடத்திற்கு செல்லுமாறு நோட்டீஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மற்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் தேவையான ஆக்சிஜன் கிடைக்க வில்லை. இதனால் நோயாளிகள் வேறு இடத்திற்குச் செல்லவும் என கூறியுள்ளது.

Categories

Tech |