Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ்….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய உள்ளோம். நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |