உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.
எனினும் சில சுகாதார விஷயங்களால் அந்த மகளால் ரத்தம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான ஷஷாங் சிங் ரத்தம் கொடுக்க முடிவுசெய்துள்ளார். அதனை தொடர்ந்து அவரே அறுவை சிகிச்சையும் செய்து அந்நபரை காப்பாற்றி இருக்கிறார். இதனால் பலர் அந்த அறுவை சிகிச்சை நிபுணரை பாராட்டி வருகின்றனர்.