Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்ற சென்ற ஆம்புலன்ஸ்…. சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி விபத்து…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையை கடக்க முயன்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரத்தில் இருந்து நோயாளியை ஏற்றுவதற்காக ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சிறை அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையை கடந்து சென்ற ஒருவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சேதுபதி, மருத்துவ உதவியாளர் சந்திரசேகரன் ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |