மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. சம்பவத்தன்று இரவு அங்கு சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துக் கொள்ளவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை விசாரித்த மருத்துவமனை ஊழியர்களிடம் , தான் நோயாளியை கவனித்து கொள்வதற்காக வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து அப்பெண்ணை விசிட்டர்கள் தங்குமிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர். அந்த சமயம் இவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனை செக்யூரிட்டிகள் 3 பேர் வந்து அந்த பெண்ணை, பார்க்கிங் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த இடத்தில் யாருமே இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் அவ்விடத்தில் வைத்து அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த பெண் கதறி துடித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு மனீஷ்(22), பிரவீன் திவாரி(24), கன்வார் பால்(33) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.