Categories
தேசிய செய்திகள்

நோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் செய்த செயல்… மருத்துவர், நர்ஸ்கள் மீது தாக்குதல்… வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய தலைநகர் டெல்லியில் sarita vihar பகுதியில் உள்ள  அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 62 வயதுடைய நோயாளி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையையும் மருத்துவ உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் பலத்த காயம் அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் இருந்த நடைபாதை முழுவதிலும் ரத்தம் கொட்டி கிடப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Categories

Tech |