Categories
லைப் ஸ்டைல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்… சர்க்கரை வள்ளி கிழங்கு…!!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அரைகுறையான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகம் உள்ளது. இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இதனை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Categories

Tech |