உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது.
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.
மேலும் கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும். கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.
இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.